Tuesday 15 November 2011

About temple


Shree KalyanaMaragatheeswarar Temple(Hill)    ஸ்ரீ கல்யாண மரகதீஸ்வரர் கோவில்  

Molapalayam.K.Paramathy.KarurDistrict       
http://kalyanamaragatheeswarartemple.webs.com/




மோளபாளையம்
 முன்னூர்கிராமம்   க.பரமத்தி(வழி) கரூர்  மாவட்டம் 
மோளபாளையம்  ஸ்ரீ கல்யாண மரகதீஸ்வரர் கோவில் சுமார் 1200 ஆண்டுகளுக்கு  முந்தைய   பழமைவாய்ந்த  சக்திவாய்ந்த  அழகான திருக்கோவில் இது . ஒவ்வொரு  கோவிலையும் நிர்மாணித்து அத்திருக்கோவிலுக்கு குடமுழுக்கு விழாவை நடத்து வதற்கு முன் அந்தந்த திருகோவிலுகென்று பிரத்யேகமாக யந்திரங்களை  கொண்டு ஆகம சாஸ்திர விதிகளின்படி மந்திரப் பிரஷ்டை செய்யபடுகிறது . திருமண தடைகள் ,திருமணமான பின்பு ஏற்படும் குடும்ப பிரச்சனைகள், கணவர்-மனைவி இடையே ஏற்படும் மனக்கசப்புகள், தாம்பத்ய சுகக்குறைவு ஆகியவற்றை போக்கி மன நிறைவை அளிக்கும் இல்வாழ்கையை தந்தருளும் யந்திரங்கள் கருவறையில் எழுந் தருளியுள்ள எம்பெருமானின் பீடத்திலும் , அதற்கு நேர் கோட்டில் கீழே ஆழத்தில் எவராலும் தீண்ட முடியாத படி பிரதிஷ்டை செய்யபட்டிருப்பதால் இப்பெருமானின் காரண திருப்பெயர் ஸ்ரீ கல்யாண மரகதீஸ்வரர் என்பதாகும் .   
கொங்கு நாட்டின் பெருமை 
இத்திருக்கோவிலில்  உள்ள பல கல்வெட்டுகளில் இருந்து கொங்கு நாட்டின் பலம்பெரும் வரலாற்றுப் பெருமை தெரிகிறது .தொல்பொருள்  துறையினரும் இத்திருக்கோவில் பற்றி பல ஆய்வுகளை  செய்திருக்கிறார்கள். 
ஒரு காலத்தில் கொங்குநாடு 24 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. இந்த 24 பகுதிகளும் கிழக்கில் மாயனூர் , தெற்கில் பழனி மலை , மேற்கில் வெள்ளியங்கிரி மலை, வடக்கில் பெரும்பாலை ஆகிய வற்றை எல்லையாக கொண்டிருந்தன.கி.பி.78-ல் கங்கை குல அரசர்கள் இப்பகுதியை கைப்பற்றினர். கி.பி.894-ல் தமிழகத்தின் சோழ அரசர் கள் கொங்கு நாட்டை கைப்பற்றி சோழபேரரசை  விரிவுபடுத்தினர். சோழமன்னர்கள் இறை உணர்வு மிக்கவர் கள் .அதிலும் குறிப்பாக  சிவபக்தி மிகுந்தவர்கள். அவர்கள் சென்று வென்ற இடம் எல்லாம்  சிவபெருமானுக்கு  அழகிய அற்புத கோவில் கலை நிர்மாணித்தனர் .  
         அத்தகைய திருக்கோவில்களில் ஒன்றுதான் முன்னூர் மோளபாளையம் ஸ்ரீ மரகதீஸ்வரர் 
 திருக்கோவில் ஆகும் . "ஜியலோஜிகள் சர்வே ஆப் இந்தியா'' அமைப்பின் ஆய்வின்படி கி.பி.894-ம் ஆண்டில் இக்கற்கோவில் நிர்மாணிகப்பட்டது தெரிய வருகிறது . மிக தொன்மையான இத் திருக்கோவில் அமை ந்துள்ள திருமலையின் கற்கள் பச்சை நிற வண்ணத்தில் மரகத கல்லை போன்று இருப்பதால் இப்பெருமானுக்கு ஸ்ரீ மரகதீஸ்வரர் என்ற திருநாமம்  ஏற்பட்டது  
என்றும பெரியோர்கள் கூறுகின்றனர் .அல்லது அர்த்நாரீஸ்ரராக தரிசனமளிக்கும் சிவபெருமானின் திரு மேனி மீது அம்பிகை யின் பச்சை நிற ஒழி படிந்திருப்பதால் அந்த அழகு  தரிசனத்தை தரிசித்து மகிழ்ந்த மாமுனிவர்கள் மெய்மறந்து மரகதீஸ்வரர் என்று பூஜித்திருக்கலாம். ப்படி இருப்பினும் ஸ்ரீ மரகதீஸ்வர பெருமானின் சிவலிங்க திருமேனியின் அழகு மனதை மெய் சிலிர்க்க  வைக்கிறது.  
              கருவறை யில் உள்ள ஸ்ரீ மரகதீஸ்வர பெருமானின் சிவலிங்க திருமேனியின் அடியிலிருந்து மிக நீண்ட மரகத கொடி ஒன்று , இம்மலையின் நேர் கோட்டில் உள்ள சிவன் மலைக்கு செல்வதாகவும் தலவரலாறு கூறுகிறது . 
ஆங்கிலேய அதிகாரிக்கு காட்டிய கருணை 
ஒரு சமயம் அப்பகுதியில் இருந்த ஆங்கிலேய அதி காரி ஒருவர் கருவறை யினுள் சென்று மரகதீஸ்வரர் சிலை அருகில் பூதக் கண்ணாடி மூலம் பார்த்து மரகதக்கொடி இருப்பதை உறுதி செய்து கொண்டு , அக்கொடியை பற்றி ஆராய்ச்சி செய்து பார்ப்பதற்காக அதனை எடுக்க முடிவு செய்தார் . அதற்க்காக சில  சாதனங்களை கொண்டுவர மலையின் கீழே  உள்ள இடும்பர் கோவிலுக்கு இறங்கி வந்ததும் அந்த அதிகாரியின் இரு கண்களும் தெரியாது குருடாகி விட்டன .திடுக்கிட்டு போன அந்த அதிகாரி , பிறர் தடுத்தும் , தன் அகந்தை  யினால் கருவறையினுள் சென்று அந்த மரகத கொடியை தீண்டி ஆராய்ச்சி செய்த தோசத்தின் விளைவாகவே தன் கண்  பார்வை இலக்கச் செய்தது என்பதை உணர்ந்து கண்ணீர் விட்டு கதற , இறைவனும் திரு உள்ளம் உருகி  மீண்டும் கண் பார்வையை அளித்தருளினார் என்ற நிகழ்ச்சியும் தல வரலாறு தெரிவிக்கிறது. 
திருகோவிலின் தெய்வீகச் சூழ்நிலை 
மோளப்பாளையம் ஸ்ரீ கல்யாண மரகதீஸ்வரர் எழுந்தருளியிருக்கும் திருமலை மூன்று தெய்வீக மலை களால் சூழப் பட்டுள் ளது . அவை களுள் ஒன்றான சந்நியாசி கரடு எனப்படும் மலையில்  ஏராளமான சித்த புருஷர் கள் இம் மலை யில் தங்கள் சூட்சும சரீரத்துடன்  த வம் இருந் த தாக பெரியோர் கள் கூறு கின்றனர் 
இம்மலையும் பழனி மலையே 

இத் திருக்கோவிலில் மேற்கு நோக்கி  எழுந்தருளி இருக்கும் ஸ்ரீ உத்தண்ட வேலாயுத சுவாமி பழனி முருகப்பெருமானின் அம்சம் என்றும் பரம்பரையாக ஒரு நம்பிக்கை இருந்து வருகிறது.          
திருக்கோவில் நிர்வாகம் 
மிக பழமையும் தெய்வீக சக்தியும் கொண்டு இயற்கை அன்னையின் மடியில் தவழும் அழகான திருக்கோவில் கி .பி .1731 -ம் ஆண்டு வரை இப்பகுதியின் குறுநில மன்னரின் கவனத்தை பெரிதும் ஈர்த்தது . அவர் தனது பொருளினால் திருப்பணி செய்து இத் திருக்கோவிலை பராமரித்து வந்தார் . இம் மலையின் இயற்கை வனப்பையும் மக்கள் கொண்டிருந்த பக்தி யை யும் கண்டு கி .பி .1802
-ல் இத் திருக்கோவிலை ஆங்கிலேயர்கள் தங்கள் நேரடி நிர்வாகத்தில் எடுத்துக் கொண்டனர் . அதன் பின் 1846
 -ல் ஆங்கிலேய அதிகாரிகள் பாவாடை  இராயப்ப கவுண்டரின் பரம்பரை வாரிசுகளை அரங்காவலர்களாக அமைத்து திருக்கோவில் நிர்வாகத்தை ஒப்படைத்தனர் .
கி .பி 1947 -ல் நம் நாடு சுதந்திரம் பெற்ற பின் இத் இத்திருக்கோவில் தமிழக அரசின் இந்து சமய அறநிலைய பொறுப்பில் சேர்க்கப்பட்டது. தொன்மையான இத்திருக்கோவிலின் வரலாறு பற்றி பல கள்வெட்டுகள் உள்ளன. தல புராணத்திலும் புலவர்களின்  தனிப்பாடல்களிலும்   இப்பெருமானைப் பற்றி அழகான பல பாடல்கள் உள்ளன. 
ஸ்ரீ கல்யாண மரகதீஸ்வரர் , அம்பிகை ஸ்ரீ மரகதவல்லி, ஸ்ரீ 
விநாயகர் , ஸ்ரீ உத்தண்ட வேலாயுத சுவாமி , நந்தி , ஸ்ரீ தட்சினாமூர்த்தி, ஸ்ரீ துர்க்கை அம்மன் , ஸ்ரீ சனீஸ்வரர் , ஸ்ரீ சந்திரன் , ஸ்ரீ சூரியன் , ஸ்ரீ சண்டிகேஸ்வரர், நவ கிரகங்கள் , ஸ்ரீ கால பைரவர்  ஆகிய திருச்சந்நிதிகளும் இக்கோவிலில் உள்ளன .

»பலம் பெருமை யுடனும் இன்றைய சோக நிலை யிலும் நெஞ்சை தொடும் வகையில் பிரகாசிக்கும் இத்திருக்கோவிலை  அறநிலைய துறையினர்  சீரமைத்து தமிழக மக்கள் இதன் பெருமையை அறியும்படி செய்ய வேண்டும்  .கிடைத்தற்கரிய மாபெரும் பொக்கிஷங்களில் ஒன்று ஸ்ரீ மரகதவல்லி சமேத ஸ்ரீ கல்யாண மரகதீஸ்வரர் திருக்கோவில்  .
»ஒரு முறையாவது இத்திருக்கோவிலை ஒவ்வொருவரும் தரிசிக்க வேண்டியது மிகவும் அவசியம் . பெருமானின் திவ்ய  தரிசனமும் கருணை ததும்பும் அம்பிகை யின் திவ்ய சேவையும் பிறவியில் கிடைத்தற்கரிய பாக்கியங்கள் ஆகும்